ஏனடி கலங்குகிறாய்?
என்ன குறையடி உனக்கும் எனக்கும்?
இந்த தாய் மண்ணில், பிறந்த பூமியில்
என்ன இல்லை உனக்கும் எனக்கும்?
தாய் மடி இருக்கு, நாம் உறங்க
தந்தை காவல் இருக்கு, நமது நிம்மதியா
சகோதர சகோதரி இருக்கு, நாம் பகிர
உற்றார் உறவினர் இருக்கு, நம்மை கண்டுகொல்ல
ஏனடி கலங்குகிறாய்?
என்ன இல்லையடி உனக்கும் எனக்கும்?
இந்த தாய் மண்ணில், பிறந்த பூமியில்
என்ன கலக்கம் உனக்கும் எனக்கும்?
வயல் வெளி இருக்கு, பயிர் அறுக்க
தெய்வம் காவல் இருக்கு, நாம் துதிக்க
வற்றா கடல் இருக்கு, நாம் அருந்த
மரமும் வானமும் இருக்கு, நம்மை சூழ
வாழடி வாழ்
அளவில்லா சந்தோஷத்துடன் வாழ்
நாம் வாழ மட்டும் ஏன் கலங்கவேண்டும்
அகம் புறம் மகிழ வாழ்!