Wednesday, December 22, 2010

நன்றி!

கம்பு விளைவிக்கும் என்னை, கம்பனை யுன்ன செய்தாய்;
முரடனாய் இருந்த என்னை, பாப்பா பாட்டு பருகச் செய்தாய்;
கலங்கவிருந்த என்னை, கண்ணதாசன் வசம் இழுத்தாய்
கலி முத்தும் எனக்கும், தமிழே நீ சிறந்தாய்!

மனதில் களஞ்சியம்

அகோரம் என்றார்கள், அஞ்ஞானம் என்றார்கள்
அக்கவிதை பேருந்து நிலையத்தில் நிற்கும்போது;
கனவாகும் நிஜங்களும், நினைவாகும் கனவும்
என் நெஞ்சத்துள் சிற்பமாகும் என்று, தெரிவதில்லை
அந்த அற்ப மானிட பதர்களுக்கு!