வீரமே உருவான கரமே
சோகமே கொண்டு ஏன் நடுங்குகிறாய்,
அபயம் பலருக்கு அளித்த கரம்,
அன்பு காட்டி ஆதரித்த கரம்,
ஆசையோடு அணைத்த கரமே
வெட்ட துணிவதா என எடுத்துக்காட்டி
என் இதயத்தையும் நடுங்க வைக்க பார்கிறாயா?
இதயமே, ஏன் பதறுகிறாய்
நான் படு பாதகத்துக்கு துணிந்துவிட்டேன்,
நீயும் உணர்ச்சி அற்ற கல்லாகிவிடு.
ஏய் பாசமே, இறக்கமற்ற என்னிடத்தில்,
இன்னும் ஏன் இருக்கிறாய்,
அன்பு ததும்பும் வெறு உள்ளங்களை தேடிக்கொள்.
துக்கமே, உலர்ந்து போன உள்ளத்திலே
இனி உனக்கு இடம் இல்லை
ஆசா பாசம் அற்று ஜடப்பொருளாக
என்னை விட்டு செல்லுங்கள்
சூரிய வம்சம் இன்றோடு அழிந்து போகட்டும்!
No comments:
Post a Comment